தமிழ்நாடு

”சோஷியல் மீடியாவில் பகிர்வேன்”.. பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

”சோஷியல் மீடியாவில் பகிர்வேன்”..  பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (33). வாலிபரான இவர் தனது பகுதியில் இருக்கும் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ காட்டி, அந்த பெண்ணி மகளை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தபோது வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.

மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் செல்வத்தின் செல்போனையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories