தமிழ்நாடு

“சுற்றுலா சென்ற இடத்தில் வாலிபருக்கு நேர்ந்த அவலம்” : உயிர் நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குற்றால அருவிக்கு சுற்றுலா வந்த இடத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சுற்றுலா சென்ற இடத்தில் வாலிபருக்கு நேர்ந்த அவலம்” : உயிர் நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம், வடதிட்டான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது நண்பர்களுடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிக்கு சுற்றுலா வந்துள்ளார். பிறகு இவர்கள் ஐந்தருவியில் குளிப்பதற்காக இரவு நேரத்தில் சென்றுள்ளனர்.

அங்கு, இரவு நேரத்தில் அருவியில் குளிப்பதற்கு அனுமதியில்லாததால் குமார் உட்பட அவரது நண்பர்கள் அங்கியே இருந்துள்ளனர். அப்போது குமார், அங்கிருந்த பாலத்தின் மீது ஏறி படுத்து உறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் அவரது தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமார் மது குடித்திருந்ததால் நிலை தடுமாறி விழுந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுற்றுலா வந்த இடத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories