தமிழ்நாடு

‘We are waiting’.. ஆளுநர் மாளிகை ‘டீ பார்ட்டி’க்கு பில் கேட்டு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘We are waiting’.. ஆளுநர் மாளிகை ‘டீ பார்ட்டி’க்கு பில் கேட்டு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும் பா.ஜ.க தங்களால் ஆட்சியை பிடிக்க முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பல்வேறு இடையூறுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநருக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அ.தி.மு.க, மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதால், ஆளுநர் மூலம் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாத நிலையிலேயே அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆட்சியாளர்களிடம் நடந்துக்கொண்ட அதே பாணியை தமிழக ஆளுநர் கையில் எடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதை உண்மை என்று உணர்த்தும் வகையிலேயே ஆளுநரின் செயல்பாடுகளை அமைந்துள்ளதாக அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே, நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் 142 நாட்களுக்கு பிறகு தமிழக அரசுக்கே ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

‘We are waiting’.. ஆளுநர் மாளிகை ‘டீ பார்ட்டி’க்கு பில் கேட்டு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

பின்னர், மீண்டும் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கே மீண்டும் அனுப்பியது தி.மு.க. அரசு. அப்போது, நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், இந்த விருந்தை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. மக்களாட்சி மாண்பின் அடையாளமான சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன. அதுமட்டுமல்லாது விருந்தில் கலந்துக்கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எதிர்கட்சிகள் விருந்தில் கலந்துக்கொள்ளவில்லையென்றால், ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு என பேசியுள்ளார்.

தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருசேர கொண்டுவந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்ததைக் கண்டிக்கும் விதமாக, விருந்தை புறக்கணிக்கும் கட்சிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

‘We are waiting’.. ஆளுநர் மாளிகை ‘டீ பார்ட்டி’க்கு பில் கேட்டு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

இந்நிலையில், அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ஆளூர் ஷாநாவஸ் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆளூர் ஷாநாவஸ் வெளியிட்டுள்ள பதிவில், “பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆளூர் ஷாநாவஸ் ட்விட்டர் பதிவுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த பதிவில், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவை ரீட்வீட் செய்த, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா, “என்னவோய் சங்கி எங்க அண்ணன் பில் கேக்குறாரு, அப்போ அந்த டீ கூட ரவி சொந்த செலவு இல்லையா

இருக்குறது சென்னையில, தின்றது தமிழ் மக்கள் காசுல

நாங்க குடுத்த ஒரு வேலை நீட் மசோதா டெல்லிக்கு அனுப்புறது அதயும் செய்யல

அப்பறம் என்ன்ன்ன்னா மைசூர் பாக்கு தின்ன டீ காசு மிச்சம்னு கதவிடுற” என பதிவிட்டுள்ளார்.

இதனியடுத்து தி.மு.க அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் இந்த பதிவுகள் ட்விட்டரில் வைரலானதோடு, நெட்டிசன்களும் தங்களது பங்குக்கு அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினரை கதறவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories