தமிழ்நாடு

ஏ.டி.எம் டெபாசிட் மெஷினில் கள்ளநோட்டு செலுத்திய பெண்? விசாரணையில் வெளியான பகீர் கிளப்பும் தகவல்!

நந்தம்பாக்கம் தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டுகளை செலுத்திய பெண்ணிடம் போலீஸ் விசாரணை.

ஏ.டி.எம் டெபாசிட் மெஷினில் கள்ளநோட்டு செலுத்திய பெண்? விசாரணையில் வெளியான பகீர் கிளப்பும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம், மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் செலுத்தும் கருவியில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டு 28 தாள்களை கொண்ட கள்ள நோட்டு டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளர் லதா நந்தம்பாக்கம் போலிஸிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

அதன் பேரில் நந்தம்பாக்கம் போலிஸார் விசாரணை நடத்தியதில், பணம் செலுத்திய பரங்கிமலையை சேர்ந்த எப்ஸி (28) என தெரியவந்தது. தனியார் கிரெடிட் கார்டு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றும் எப்ஸியிடம் போலிஸார் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது வங்கி ஏ.டி.எம்மில் பணத்தை செலுத்த சென்ற போது ஒருவர் வந்து ரூ.14 ஆயிரத்தை கொடுத்து இதனை வங்கியில் செலுத்தி விட்டு தனக்கு ஆன்-லைனில் பணத்தை அனுப்ப வேண்டும் என கூறினார்.

ஆனால் செலுத்திய பணம் எனது கணக்கிற்கு வராததால் பணம் அனுப்பவில்லை என கூறினார். இதையடுத்து பணம் கொடுத்தது யார் என விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories