தமிழ்நாடு

3 மாதத்திற்கு மேல் கற்க இந்தியில் என்ன இருக்கிறது? - வைரலாகும் பேரறிஞர் அண்ணாவின் பேச்சு!

 3 மாதத்திற்கு மேல் கற்க இந்தியில் என்ன இருக்கிறது? - வைரலாகும் பேரறிஞர் அண்ணாவின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இந்தி மொழியைத் திணிக்கும் வகையில் பேசினார்.

அதற்கு தமிழ்நாடு முதல்வர், தி.மு.கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, "இது இந்திய ஒன்றியத்திற்கு வேட்டு வைக்கும் செயல்" என்று எச்சரிக்கை விடுத்தார். அதேபோன்று பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அமித்ஷா பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணமிருக்கின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்தி மொழியைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் எப்படித் தோலுரித்துக் காட்டுகிறார் பாருங்கள்.

அண்ணா பேசுகிறார்:- "ஒரு வடநாட்டுப் பெரியவர், என்னிடத்தில் என்னைப் பாராட்டி விட்டுச்சொன்னார்,

‘நீங்கள் முயற்சி செய்தால் மூன்றே மாதத்தில் இந்தியைப் படித்து விடலாம்’ என்றார். நான் ஒப்புக்கொண்டேன், ‘ஆமாம் அய்யா. மூன்றே மாதத்தில் படித்து விடலாம்’ என்றேன். ‘என்ன?’ என்றார்.

"அதற்கு மேலே படிப்பதற்கு அந்த மொழியில் என்ன இருக்கிறது?" என்றேன் நான்".- பேரறிஞர் அண்ணா அவர்களின் அந்த உரையின் இந்தப் பகுதி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கின்றது.

நன்றி : முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories