தமிழ்நாடு

”இதுதான் திராவிட மாடல் ஆட்சி”.. மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அனைவர்க்கும் வேலை கொடுப்போம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

”இதுதான் திராவிட மாடல் ஆட்சி”.. மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும்-உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பதை பட்டியலிட்டார். இதன் விவரம் வருமாறு:-

தமிழக மக்களுக்கு உன்னதமான நல்லாட்சியைக் கொடுத்துவரும் நாம் - நம்முடைய திராவிடவியல் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் கடமையையும் நாம் செய்வோம்.

அனைவருக்கும் கல்வியைக் கொடுப்போம். பள்ளிக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்!

* அனைவர்க்கும் வேலை கொடுப்போம். ஏதோ ஒரு வேலை அல்ல, அவர்களது தகுதிக்கு ஏற்ற வேலையைக் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* அனைவர்க்கும் உரிய மருத்துவ வசதியை அளிப்போம். அவர்கள் அந்த மருத்துவ வசதியைத் தேடி வர வேண்டியது இல்லை. அவர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின - இருளர் மற்றும் நரிக்குறவர் போன்ற விளிம்பு நிலை மக்களுக்குமான ஆட்சியை நடத்துவோம். அதுவும் சமூகநீதி ஆட்சியை நடத்துவோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* குறிப்பிட்ட துறைகள் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் முன்னேற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* குறிப்பிட்ட மாவட்டம் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களும் வளர்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பது - கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

வெற்றி நம் கண்ணை மறைத்ததும் இல்லை; தோல்வி நம்மை சோர்வடையச் செய்ததும் இல்லை. நாம் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கிறோம். மக்களுக்காகவே இருக்கிறோம். அதனால்தான் மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடாது என நினைப்பவர்கள்தான் இன்று நம்மை எதிர்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories