தமிழ்நாடு

சிறிது சிறிதாக 96 துண்டுகள்: சொகுசு காரில் கடத்தி வந்த 75 கிலோ சந்தன கட்டைகள்.. திருவள்ளூர் போலிஸ் அதிரடி

சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 75 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல். மூன்று பேரை கைது செய்து

சிறிது சிறிதாக 96 துண்டுகள்: சொகுசு காரில் கடத்தி வந்த 75 கிலோ சந்தன கட்டைகள்.. திருவள்ளூர் போலிஸ் அதிரடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் போலிஸார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 75 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல். மூன்று பேரை கைது செய்து விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை கே எஸ் சாலையில் இரவு பகலாக கவரப்பேட்டை போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது நள்ளிரவில் வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை மடக்கி பரிசோதனை செய்தபோது, சொகுசு காரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட 96 துண்டுகள் அடங்கிய 75 கிலோ சந்தன கட்டைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

சிறிது சிறிதாக 96 துண்டுகள்: சொகுசு காரில் கடத்தி வந்த 75 கிலோ சந்தன கட்டைகள்.. திருவள்ளூர் போலிஸ் அதிரடி

பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் கடத்தலில் ஈடுபட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த சர்ஃப்ராஷ் அலி (39), கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த அர்பாஸ் (25), நைஜர் மற்றும் முகமத் (25) ஆகிய மூவரையும் போலிஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் காரில் கடத்தப்பட்ட சந்தன கட்டைகள் விஜயவாடா கோவிலில் இருந்து சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு முறையாக கொண்டு செல்லப்படுவதாகவும், அடுத்த கட்ட விசாரணைகளில் முழு தகவல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories