தமிழ்நாடு

"நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ.." : உற்சாகமாக கீபோர்டு வாசித்து அசத்திய போலிஸ் ஐ.ஜி!

புதுச்சேரி ஐ.ஜி சந்திரன் இசைக் கச்சேரி மேடைக்குச் சென்று, ’நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’ பாடலுக்கு நீண்ட நேரம் கீபோர்டு வாசித்து அசத்தினார்.

"நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ.." : உற்சாகமாக கீபோர்டு வாசித்து அசத்திய போலிஸ் ஐ.ஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரி டி.வி நகரைச் சேர்ந்தவர் இசைக்கலைஞர் ராஜேஷ். இவர் பிரபல இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா புதுச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், புதுச்சேரி மாநில காவல்துறை ஐ.ஜி சந்திரன், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்து உற்சாகமடைந்த, ஐ.ஜி சந்திரன் இசைக் கச்சேரி மேடைக்குச் சென்று, எங்கேயும் காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற ’நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’ பாடலுக்கு நீண்ட நேரம் கீபோர்டு வாசித்து அசத்தினார்.

காவல்துறை ஐ.ஜி ஒருவர் திடீரென விழா மேடையில் கீபோர்டு வாசித்த நிகழ்வை, விழாவிற்கு வந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமில்லாமல், கைதட்டி தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories