தமிழ்நாடு

பிரபல இளம் புகைப்பட கலைஞர் மாரடைப்பால் மரணம்.. நெட்டிசன்கள் அதிர்ச்சி!

இளம் புகைப்பட கலைஞர் அஜய் சுகுமார் மாரடைப்பால் காலமானார்.

பிரபல இளம் புகைப்பட கலைஞர் மாரடைப்பால் மரணம்.. நெட்டிசன்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையைச் சேர்ந்தவர் அஜய் சுமார். இவர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். தான் எங்குச் சென்றாலும் அந்த இடத்தின் அழகைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இவரின் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நெட்டிசன்கள் பலரும் இவரைப் பின்தொடர்ந்து இவரின் அடுத்த புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என காத்திருப்பர். அந்த அளவிற்குத் தனது புகைப்படத்தால் தனக்கு என்று தனி நட்பு வட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

கடந்த வாரம் தான் அஜய் சுகுமார் தனது 23வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அவரது நண்பர்கள் சமூக வலை வலைதளத்தில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து, அவருடனான தங்களின் நட்பையும் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் 'எதுவும் நடக்கலாம். எதற்கும் தயாராக இருப்போம். நினைத்ததை முடிப்போம்" என அவர் எழுதிய வாசகத்தை நெட்டிசன்கள் குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories