தமிழ்நாடு

“நடந்து வரும்போது செல்ஃபோன் பறிப்பு” : புகார் சொன்ன கல்லூரி மாணவி - போலிஷாருக்கு காத்திருந்த ‘ஷாக்’!

செல்போன் திருட்டுப்போனதாக பொய் புகார் கொடுத்த கல்லூரி மாணவியை போலீசார் எச்சரித்தனர்.

“நடந்து வரும்போது செல்ஃபோன் பறிப்பு” : புகார் சொன்ன கல்லூரி மாணவி - போலிஷாருக்கு காத்திருந்த ‘ஷாக்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நண்பரிடம் செல்போனை கொடுத்துவிட்டு திருட்டு போனதாக பொய் புகார் கொடுத்த கல்லூரி மாணவியை போலிஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதல் ஆண்டில் படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்ததும் பகுதிநேர வேலையாக முகப்பேரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பியுள்ளார். அப்போது முகப்பேர் பகுதியில் நடந்துவரும்போது தனது செல்போனை ஒருவர் பறித்துவிட்டார் என நொளம்பூர் காவல் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார்.

மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது செல்போன் பறிப்பு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிந்தது.

இதையடுத்து புகார் கொடுத்த மாணவியிடம் போலிஸார் தொடர்ந்து விசாரித்ததில் அந்தப் பெண், “என்னோட ஃப்ரெண்ட் பிரேம்கிட்ட என் செல்போனை கொடுத்திருந்தேன். இது வீட்டிற்கு தெரிஞ்சா திட்டுவாங்கனு பொய்யாக புகார் கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார், “இதுபோல் பொய்யாக புகார் கொடுத்தால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும்” என அந்த மாணவியை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories