தமிழ்நாடு

'புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்..' : முன்னாள் காதலியை மிரட்டிய வாலிபர் : 'காப்பு' மாட்டிய போலிஸ்!

சிதம்பரம் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

'புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்..' : முன்னாள் காதலியை மிரட்டிய வாலிபர் : 'காப்பு' மாட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் திருமணத்திற்கு முன்பு மணிகண்டன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். பின்னர் சந்தியா வேறு நபரைத் திருமணம் செய்துள்ளார். இருப்பினும் மணிகண்டன் தொடர்ந்து சந்தியாவை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

மேலும் இருவரும் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர் மணிகண்டன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என காதலன் மிரட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories