தமிழ்நாடு

காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை ஹெல்மெட்டால் தாக்கிய காதலன்; போலிஸில் சிக்கவைத்த காதலி - நடந்தது என்ன?

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டி தாக்கிய வழக்கில் சென்னையில் இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை ஹெல்மெட்டால் தாக்கிய காதலன்; போலிஸில் சிக்கவைத்த காதலி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை , செம்மஞ்சேரி பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுமி, சின்னமலை பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வருகிறார். அந்த மாணவியை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மேற்படி மாணவி முகேஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 30) காலை 8.45 மணியளவில் மாணவி பள்ளி செல்வதற்காக வேளச்சேரி, செக்போஸ்ட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர் சையத் மசூத் ஆகிய இருவரும் பள்ளி மாணவிடம் சென்று பேச சொல்லியும், காதலிக்க வற்புறுத்தியும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை ஹெல்மெட்டால் தாக்கிய காதலன்; போலிஸில் சிக்கவைத்த காதலி - நடந்தது என்ன?

ஆனால் மாணவி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த முகேஷ் மாணவியை ஹெல்மட்டால் தாக்கியுள்ளார். அருகிலிருந்த மாணவர்கள் சத்தம்போடவும் முகேஷ் மற்றும் அவரது நண்பர் சையத் மசூத் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். பின்னர் இருவரும் காலை 11.00 மணியளவில் மாணவி பயிலும் பள்ளி வளாகத்திற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

இது குறித்து மாணவி கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. அதன் பேரில், கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில்

முகேஷ் (22) , அவரது நண்பர் சையத் மசூத் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (30.03.2022) சிறையில் அடைக்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories