தமிழ்நாடு

“மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது” : குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து போலிஸ் அதிரடி!

திருச்சியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலிஸார் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

“மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது” : குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக் கோவில் பகுதியில் 50 வயது பெண் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது, ராஜா என்பவர் வீட்டினுள் புகுந்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்தப்பெண் கொடுத்தப் புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலிஸா , குற்றவாளி ராஜாவைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில், மேற்படி வழக்கின் குற்றவாளி ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்கில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ராஜா தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என போலிஸ் விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ராஜாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் .

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories