தமிழ்நாடு

”மகளிர் மீது அக்கறை கொண்ட ஒரே முதல்வர் நம் முதல்வர்தான் ” : அமைச்சர் க.பொன்முடி பெருமிதம்!

உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என நம் தமிழக முதல்வர் மட்டும்தான் அறிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

”மகளிர் மீது அக்கறை கொண்ட ஒரே முதல்வர் நம் முதல்வர்தான் ” : அமைச்சர் க.பொன்முடி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயந்தூர், முகையூர், சித்தாத்தூர், கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர், ஆகிய ஊர்களிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு நகைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல இணை இயக்குனர் யசோதாதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு நகைகளைத் திருப்பி ஒப்படைத்தார்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, "மகளிருக்கு தி.மு.க அரசு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்து உயர்கல்வி சேரும் மாணவர்களுக்குக் கட்டணமில்லை என அறிவித்த ஒரே அரசு நம் தமிழ்நாடு அரசுதான். அத்துடன் நிற்காமல், உயர் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த ஒரே முதல்வர் நம் முதல்வர் மு.க ஸ்டாலின்தான்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், பிரபு, ராஜீவ்காந்தி, மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories