தமிழ்நாடு

“அடுத்தவாரம் வீட்டில் விசேஷம்.. செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை” : பகீர் சம்பவம்!

புதுச்சேரியில் செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அடுத்தவாரம் வீட்டில் விசேஷம்.. செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை” : பகீர் சம்பவம்!
கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி அருகே ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தம்பதிகள் தேசிங்கு - விக்டோரியா. இவரது மகள் திவ்யா (19) கோரிமோட்டில் உள்ள அன்னை தெரசா சமுதாய நலக் கல்லூரியில் பி.பார்மசி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில், திவ்யாவுக்கு அடுத்த வாரம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக தேசிங்கு வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் இருந்த திவ்யா தேர்வுக்கு படிக்காமல் செல்போனை பார்த்து கொண்டிருந்தார்.

இதனை தாயார் விக்டோரியா கண்டித்தார். பின்னர் அவர் வெளியில் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மின்விசிறியில் திவ்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாகூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories