தமிழ்நாடு

இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பணம் பறிப்பு - மோசடி கும்பலுக்கு ‘காப்பு’ மாட்டிய காவல்துறை!

ஆம்பூரில் புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி பெண்ணிடம் மிரட்டிப் பணம் பறித்து வந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பணம் பறிப்பு - மோசடி கும்பலுக்கு ‘காப்பு’ மாட்டிய காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் நடைப்பெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது 10 வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலின்போது அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஜெயின் மற்றும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் ஷேக் இஸ்மாயில் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மூவரும் பெண்ணுடன் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து இன்று பாதிக்கப்பட்ட பெண் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் தனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி தன்னிடம் பணம் பறிப்பதாகக் கூறி மூன்று இளைஞர்கள் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆம்பூர் நகர காவல்துறையினர் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆம்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி ஆம்பூர் கிளை சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories