தமிழ்நாடு

திடீரென தீப்பற்றி எரிந்த கரும்புத்தோட்டம்.. முழுவதுமாக கருகி நாசம் - நடந்தது என்ன?

தீப்பற்றி எரிந்து கரும்புத் தோட்டம் நாசமானது விவசாயியை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

திடீரென தீப்பற்றி எரிந்த கரும்புத்தோட்டம்.. முழுவதுமாக கருகி நாசம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்துள்ளார்.

கரும்பு முதிர்வடைந்து ஆலைக்கு வெட்டும் தருவாயில் இருந்தது. இந்நிலையில் இன்று கரும்பு காட்டிற்கு மேல் சென்ற மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் கரும்புக் காட்டில் தீப்பற்றி ஏறிய ஆரம்பித்தது.

கொளுத்தும் வெயிலில் பற்றி எறிந்த நெருப்பை பார்த்த மக்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த கரும்புத்தோட்டம்.. முழுவதுமாக கருகி நாசம் - நடந்தது என்ன?

இருப்பினும் வெப்பத்தின் தாக்கம், தொடர் காற்று ஆகியவற்றால் தீ முழுவதுமாக எரிந்து கரும்புத் தோட்டம் நாசமானது. மின் கம்பி அறுந்து விழுந்த நிலையில் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

வெட்டுவதற்குத் தயார் நிலையில் இருந்த கரும்புத்தோட்டம் எரிந்து நாசமானது அப்பகுதியினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories