தமிழ்நாடு

'இது கூட தெரியாதா?'.. சட்டமன்றத்தில் EPS, OPS-யை வறுத்தெடுத்த சபாநாயகர் அப்பாவு!

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.கவினரை சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'இது கூட தெரியாதா?'.. சட்டமன்றத்தில் EPS, OPS-யை வறுத்தெடுத்த சபாநாயகர் அப்பாவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் 2022 - 2023) நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அப்போது நிதியமைச்சர் தனது உரையை துவங்கும்போது, பேரவையிலிருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, அமளியில் ஈடுபடாமல் பட்ஜெட் உரையைக் கேட்கும்படி அ.தி.மு.க உறுப்பினர்களிடம் கூறினார்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர், 'அவையின் மரபை அ.தி.மு.க உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டும். நீங்கள் கூறும் கருத்துக்கள் எதுவும் அவைக்குறிப்பில் இடம் பொறாது.

இன்று நிதிநிலை அறிக்கை மட்டும்தான் தாக்கல் செய்யப்படும். இது உங்களுக்கே தெரிந்தும் அமளி செய்வது சரிதானா?, எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சராக இருந்தவர். அவையின் நடவடிக்கைகள் அவருக்கு நன்கு தெரியும். இருந்தும் இப்படிச் செய்யலாமா?' என கூறினார். இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

banner

Related Stories

Related Stories