தமிழ்நாடு

IT ரெய்டு Update : மாட்டிய அமைச்சர்களும்.. சிக்கிய தொகையும் - மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஊழல் பட்டியல்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் 2வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

IT ரெய்டு Update : மாட்டிய அமைச்சர்களும்.. சிக்கிய தொகையும் - மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஊழல் பட்டியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போதே எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்தது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் இன்று காலையிலிருந்தே சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை சோதனையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து எவ்வளவு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு சொத்துகளை முறைகேடாகச் சேர்த்துள்ளனர் என்ற பட்டியைலை பின்வருமாறு பார்ப்போம்.

அ.தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் தனது பதவிக்காலத்தில் வருமானத்தைவிட அதிகமாக 55% சொத்துக்களைக் குவித்துள்ளார். இந்த வழக்கில்தான் கடந்த ஜூலை மாதம் 26 இடங்களில் சோதைனை செய்யப்பட்டது. இதில் ரூ. 25.56 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

IT ரெய்டு Update : மாட்டிய அமைச்சர்களும்.. சிக்கிய தொகையும் - மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஊழல் பட்டியல்!

அ.தி.மு.க ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறைக்கு அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் தனது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 657% சொத்துக்களைக் குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 35 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.34 லட்சம் ரொக்கப்பணம், 5 கிலோ தங்க நகைகள், ரூ.1,84 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தப் பட்டியலில் அடுத்து இடம் பெறுபவர் சி.விஜயபாஸ்கர். இவர் அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார். தனது பதவிக்காலத்தில் ரூ.27 கோடிக்கு சொத்துக்குவிப்பு புகார் எழுந்ததையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சோதனை 43 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், ரூ.23.82 லட்சம் பணம், 4,87 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அறக்கட்டளை தொடங்கி அன்னை தெரசா பெயரில் 14 கல்வி நிறுவனங்களை நடத்துகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடு எனவும் தகவல் வெளியானது.

அ.தி.மு.க ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி. இவர் 2016 - 2020ஆம் ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4,85 கோடிக்கு சொத்துக்குவிப்பு புகார் எழுந்ததை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் கோடிக்கணக்கான சொத்துக்களை கிரிப்போட கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

IT ரெய்டு Update : மாட்டிய அமைச்சர்களும்.. சிக்கிய தொகையும் - மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஊழல் பட்டியல்!

அடுத்தாக கே.பி.அன்பழகன். இவர் கடந்த ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இந்த பதவியைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து ஜனவரியில் 58 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ.2,87 கோடி ரொக்கப் பணம், ரூ.6,63 கிலோ தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மற்றும் மகன்கள், மருமகள் என 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் தனது பதவியிலிருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 52 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில், 811 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் இரண்டாவது முறையாக 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பதவி வகித்த காலத்தில் எஸ்.பி.வேலுமணி ரூ.58,23 கோடிக்கு (3928%) சொத்துகளை குவித்துள்ளார் என முதல் தகவலறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எஸ்.பிவேலுமணி உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories