தமிழ்நாடு

மெழுகு சிலையில் தாய்மாமன்.. உறவின் மேன்மையைக் கூறிய காதணி விழா; திண்டுக்கல் அருகே நெகிழ்ச்சி!

இறந்த தாய்மாமனின் உருவச்சிலையின் மடியில் அமரவைத்து காதணி விழா நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெழுகு சிலையில் தாய்மாமன்.. உறவின் மேன்மையைக் கூறிய காதணி விழா; திண்டுக்கல் அருகே நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டி. இவரது மனைவி பசுங்கிளி. இந்த தம்பதிக்கு பாண்டித்துறை என்ற மகனும், பிரியதர்ஷனி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் பாண்டித்துறை உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்பு தனது அக்காவிடம் உனது குழந்தையை எனது மடையில் வைத்துத்தான் காதணி விழா நடத்த வேண்டும் என கூறிவந்துள்ளார்.

இதையடுத்து தனது மகளுக்கு பிரியதர்ஷினி காதணி விழா நடத்தியுள்ளார். இதில் உயிரிழந்த தனது தம்பியின் ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார். இது என்னவென்றால், ரூ.5 லட்சம் செலவில் தம்பியின் மொழுகி சிலையை உருவாக்கி தாய்மாமன் மடியில் அமரவைத்து தனது மகளுக்கு மொட்டை அடித்து காது குத்தியுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் அனைவரையும் உணர்ச்சி வசப்படுத்தியது. இறந்தும் தன்கடமயை நிறைவேற்றிவிட்டான் என தாய்மாமனை அனைவரும் கண்ணீருடன் பாராட்டினர். மேலும் இந்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories