தமிழ்நாடு

‘இனிமேல் இப்படித்தான்..’ : காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் கொடுத்த 10 முக்கிய அறிவுரைகள்!

குற்றங்களை தடுப்பது மட்டுமல்லாமல், குற்றவாளிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது போலிஸாரின் கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘இனிமேல் இப்படித்தான்..’ : காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் கொடுத்த 10 முக்கிய அறிவுரைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குற்றங்களை தடுப்பது மட்டுமல்லாமல், குற்றவாளிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது போலிஸாரின் கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் முக்கிய அறிவுறைகளையும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதாகவும்- அதனைக் கட்டுப்படுத்தி விடுவதாகவும் காவல்துறை இயக்குநர் சொன்னார். கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

* அதேபோல் சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் பேசும்போது, குற்றங்கள் குறைந்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டார். அதோடு அதன் விழுக்காட்டையும் எடுத்துச் சொன்னார். குற்றங்களோட விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் உங்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது.

* சாதி மோதல்கள் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே விரிவாகப் பேசினார். சாதி மோதல்களை - சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று நான் கேட்டுக்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுங்குப் பிரச்சினை. படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல - படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்குற ஒரு சிலராலும் - இதுபோன்ற மோதல்கள் உருவாகக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற இளைஞர்களைக் கண்டறிந்து மனமாற்றம் செய்யணும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரணும். ஆக்கபூர்வமான வழிகளில், விளையாட்டுப் போட்டிகளில், ஊர்க்காவல் படைகளில் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

* மத மோதல்கள் குறித்து கோவையில் இயங்குவதைப் போல சிறப்புப் பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க பரிசீலிக்கப்படும். ஒரு காலத்துல மதம் என்பது, மதம் சம்பந்தப்பட்டதா மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கமுள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது. எனவே அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள், இதை தடுத்தாக வேண்டும்.

* குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத் தரும் துறையாக இல்லாமல்- குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்குற துறையா- காவல் துறை மாற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், விரும்புகிறேன். உங்களோட எண்ணம் அதற்கேற்ற வகையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

* சோஷியல் மீடியா மூலமா நடக்குற இந்த வன்மங்களுக்கு- எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தனியா ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி- அறிக்கை தாக்கல் செய்யக் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

* தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து டாக்குமென்ட் செய்ய வேண்டும். அமைதியான மாவட்டங்களில்தான்- அதிகமான நிறுவனங்கள், தொழில்கள் தொடங்க முன்வருவார்கள்.

* ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை - என்று பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என்று அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப் பகுதியில் கஞ்சா விற்பனை நடக்குறதா அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பேசுகின்றபோது இங்கே சொன்னார். இதுபோன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது.

* குழந்தை திருமணத்தை அனுமதிக்கக் கூடாது. அது தொடர்பாக அந்தக் குழந்தைகளே தகவல் தந்தார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். ரத்தசோகை, சத்துக்குறைவான குழந்தைகளை கண்டறிய வாட்ஸ்அப் குழு தொடங்கி இருப்பதாக அவர் சொன்னது உள்ளபடி அது வரவேற்கத்தக்கது.

* போக்சோ வழக்குகள் உரிய நீதி கிடைக்கச் செய்வது உங்கள் தலையாய கடமையாகும். குறிப்பாக, இத்தகைய வழக்குகளில் தாமதங்கள் இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories