தமிழ்நாடு

மது குடிக்க காசு தராததால் ஆத்திரம்; சிகெரெட்டால் மாமியாருக்கு சூடு வைத்த மருமகன்!

வேலைக்கு எங்கும் செல்லாமல் சுற்றித்திரிந்து வந்ததால் காசு தர மறுத்த மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் சிகரெட்டால் சுட்டிருக்கிறார்.

மது குடிக்க காசு தராததால் ஆத்திரம்; சிகெரெட்டால் மாமியாருக்கு சூடு வைத்த மருமகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கண்டித்த மாமியாருக்கு சிகரெட்டால் சூடு வைத்திருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த கார்த்திக். இவருக்கு வயது 30.

பவதாரணி என்ற மனைவியும் 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முன்னதாக டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பவதாரணியை காதலித்து மணமுடித்த பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றித்திரிந்து வந்திருக்கிறது.

கூடுதலாக கார்த்திக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. வேறு வழியின்றி பவதாரணி காரைக்காலில் உள்ள நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் குழுவில் பணியாற்றி வருகிறார். இதனால் வாரம் ஒருமுறை திருச்சிக்கு வந்து செல்வதை பவதாரணி வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதனிடையே பவதாரணி வேலைக்கு செல்வது பிடிக்காமல் அவரது தாயான தேவியிடன் அவ்வப்போது சண்டையிட்டிருக்கிறார் கார்த்திக். இப்படி இருக்கையில், சம்பவம் நடந்த நாளன்று மாமியார் தேவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டிருக்கிறார்.

ஆனால் காசு கொடுக்க மறுத்த தேவி, ஏற்கெனவே மகளை சிரமப்படுத்திவிட்டு குடிக்க காசு கேட்டு தொல்லை செய்வதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தேவியை தரைகுறைவாக திட்டிவிட்டு அவரை கன்னத்தில் அறைந்ததோடு கையில் இருந்த சிகரெட்டால் மாமியாரின் கழுத்தில் சூடும் வைத்திருக்கிறார்.

இதனையடுத்து கார்த்திக் மீது ஸ்ரீரங்கம் போலிஸாரிடம் மாமியார் தேவி புகார் கொடுத்ததன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories