தமிழ்நாடு

மூன்றே நாளான பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய தம்பதி: பதறிய தாய்; மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

பிறந்து மூன்று நாள் ஆன பச்சிளம் குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து திருடிச் சென்ற தம்பதியினர் மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

மூன்றே நாளான பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய தம்பதி: பதறிய தாய்; மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிறந்து மூன்று நாட்கள் ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மகப்பேறு வளாகத்துக்குள் புகுந்து ராம் மற்றும் சத்யா என்ற தம்பதியினர் திருடி சென்றுள்ளனர்.

குழந்தையை காணவில்லை என பதறித் துடித்த குழந்தையின் தாய் சுஜாதா சத்தம் போட்டுள்ளனர். குழந்தையை திருடிய தம்பதியினர் ராம் மற்றும் சத்யா ஆகியோர் மருத்துவமனை வளாகத்தை விட்டு பேருந்து நிலையத்திற்கு செல்ல முற்படும் போது அவர்களை கண்டு மருத்துவமனை காவலர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

மூன்றே நாளான பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய தம்பதி: பதறிய தாய்; மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

இதனையடுத்து தம்பதியனரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் குழந்தையை திருடி சென்றது தெரியவந்துள்ளது. உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் குழந்தையை திருடி சென்ற தம்பதியினரை விசாரணைக்காக விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

தற்போது தம்பதியினரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருடப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories