தமிழ்நாடு

பெண்கள் தலைநிமிர வழி செய்த தி.மு.க ஆட்சியின் முத்தான 10 சாதனைத் திட்டங்கள் !

எங்கள் குடும்பச் செலவுகளுக்காக பெரிதும் உதவிகரமாக இருப்பதாகவும் பெண்கள் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

பெண்கள் தலைநிமிர வழி செய்த தி.மு.க ஆட்சியின் முத்தான 10 சாதனைத் திட்டங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் பெண்களை அக்காலத்திலே வீட்டினுள் முடங்கி வைத்திருந்தனர். பெண்களும், ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று நீதிக்கட்சி காலந்தொட்டே அதற்காக குரல் கொடுத்து வந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டி லேயே சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். பேரறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணங்களை சட்டமாக்கி பெண்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது 1989 ஆம் ஆண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கனவை நனவாக்கும் வகையில் பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு அளித்து அவர்களுக்கும் சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் அளிக்கச் செய்தார். முதன் முதலில் காவல் துறையில் பெண்களை சேர்த்த பெருமை கலைஞர் அவர்களையே சாரும். பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தார். இந்தியாவிலேயே எவரும் செய்திராத செயல் இது.

மகளிர் சுய உதவிக் குழு!

பெண்கள் சொந்தக்காலில் நின்றிட வேண்டும் என்பதற்காகவே மகளிர் சுய உதவிக்குழுக்களை தருமபுரியில் முதல்வராக இருந்தபோது கலைஞர் தொடங்கி வைத்தார். அத்திட்டத்தை துணை முதல்வராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் அவர்கள் மேலும் விரிவுபடுத்தி பெண்கள் சுயதொழில் செய்யக் கூடிய வகையில் உயர்த்திக்காட்டினார்.

1. பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம்!

மே 7ஆம் தேதி அன்று முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்று கையெழுத்திட்ட 5 திட்டங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற முத்தான திட்டத்தால், இதோ இன்று லட்சக்கணக்கான பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து மாதத்திற்கு ஆயிரம் ரூபாயி லிருந்து 1500 ரூபாய் வரை மிச்சப்படுத்தப்படுவதாகவும், எங்கள் குடும்பச் செலவுகளுக்காக பெரிதும் உதவிகரமாக இருப்பதாகவும் பெண்கள் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

2. பெண்களுக்கு சமபங்கு!

இந்தியாவிலேயே முதன்முதலாக குடும்பத்தில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கப்படும் என்று சட்டம் 6-5-1989 அன்று திமுக அரசால் இயற்றப்பட்டது.

3. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்!

இந்த ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 18 வயது நிரம்பிய எட்டாம் வகுப்பு படித்த ஏழை பெண்களும், ஐந்தாம் வகுப்பு வரை படித்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமூகங்களைச் சார்ந்த பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

சமூக நலத்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி 1-4-1989 முதல் 11-1-1991 வரை 34,595 பெண்களுக்கு மொத்தம் 17 கோடியே 30 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

4. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்!

1967-69ல் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. 1969-1976 திமுக ஆட்சியிலும் கலப்பு திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1989-1990 வரையிலான திமுக கலப்புத் திருமணம் செய்துகொண்ட 1101 தம்பதியர்களுக்கு ரூபாய் 58 கோடியே 94 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. 1996-2001-ல் திமுக ஆட்சியில் இந்த உதவித் தொகை ரூபாய் 10,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்

1989-91 திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை வழங்கும் இத் திட்டம் மூலமாக 3,71,805 பேர்கள் பயன் அடைந்தனர். 1996-2001 திமுக ஆட்சியில் 7,33,731 ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 28 கோடியே 75 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

6. பங்காரு அம்மையார் பெண்கள் முன்னேற்றத் திட்டம்

இத்திட்டம் 1989 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 1996-2001 கால திமுக ஆட்சியில் 28 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 10,06,969 பெண்கள் இத்திட்டத்தில் மூலம் பயன் பெற்றனர். அவர்களில் 1,26,882 பெண்களுக்கு ரூ.73 கோடி கடன் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 58,391 மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

7. அன்னை தெராசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

1984-85 அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திடடம் 1996-2001 திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி 1996-97 நிதியுதவி ரூ.2,000 ஆகவும், 1997-98 நிதியுதவி ரூ.3,000 ஆகவும் 1998-99ல் நிதியுதவி ரூ.5,000 ஆகவும், 1999-2000ல் நிதியுதவி ரூ.7,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

1996-2000 வரையிலான திமுக ஆட்சியில் 360 மகளிர்க்கு ரூ.16,28,00,000 நிதியுதவி வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு இந் நிதியுதவி ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 2,220 பெண்களின் திருமணங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

8. ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண நிதியுதவி திட்டம்

அதிமுக ஆட்சியில் 1981-82ல் துவங்கப்பட்ட இத்திட்டம் 1989-90 திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது. 10,44,000 பெண்களுக்கு மேற்குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் தலா ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு இத்திட்டத்தின் நிதியுதவி ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டது. 2006-2011 திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் 16365 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

9. டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணத்திட்டம்

1975 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1989-1990 திமுக ஆட்சியில் 378 பெண்கள் தலா 5000ரூபாய் வீதம் உதவித்தொகை பெற்றனர். 1996-2001 திமுக ஆட்சியில் ஒவ்வொரு பயனளாளிகளுக்கும் ரூ.10,000 வீதம் 904 விதவை பெண்களுக்கு மட்டும் ரூ.66 கோடியே 88 லட்சம் வழங்கப்பட்டது. 2006-2011 திமுக ஆட்சியில் இந்த நிதியுதவி ரூ.25,000 ஆக உயர்தப்பட்டு 16,365 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

10 ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு மகளிர் இலவச படிப்புத் திட்டம்

1989ல் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1989-90 திமுக ஆட்சிக் காலத்தில் 5444 பெண்கள் பயனடைந்தார்கள். 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

11. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

1996-2001 திமுக ஆட்சியில் விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்ற ஏழை பெண்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 14,365 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 2006-2011 திமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

12. சத்தியா அம்மையார் பால்வாடி திட்டம்

1996-2001 திமுக ஆட்சியில் 175 பால்வாடிகள் செயல்பட்டன. 17,700 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றனர்.

13. சிவகாமி அம்மையார் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தை செய்து கொள்ளும் ஏழை பெண்கள் ஒவ்வொருக்கும் அவர்களுடைய ஒவ்வொரு பெண்குழந்தைகளின் பெயரில் ரூ.1,500 வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அக் குழந்தை வளர்ந்து 20 வயது ஆகும்போது. வட்டியிடன் முழுத் தொகையும் வழங்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் 1,15,897 குழந்தைகள் பயன்பெற்றன.

இன்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும், காவல் துறை, இராணுவத் துறை, விமானத்துறைகளில் பணிபுரிபவர்களாகவும், மருத்துவர்களாக, இன்ஜினியர்களாகவும் பல பெண்கள் ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இவற்றிற்கெல்லாம் முழு முதற்காரணம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன் னேற்றக் கழகம் இதற்கான அடித்தளத்தை அமைத்ததுதான்.

இதோ இன்றும் சுதந்திரப்போராட்டத்தில் வெள்ளையரை எதிர்கொண்ட வீரமங்கை வேலு நாச்சியார் உருவம் கொண்ட தமிழக அரசின் ஊர்தியை டெல்லி குடியரசு தினவிழாவில் ஒன்றிய அரசு புறக்கணித்தாலும், அந்த வீரமங்கை இடம் பெற்ற சுதந்திரப் போராட்ட ஊர்தி சென்னை குடியரசுத் தின விழாவில் அணிவகுத்தது மட்டுமின்றி குமரி முதல் சென்னை வரை அந்த வீரமங்கை உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்ற ஊர்தியை வலம் வரச் செய்து மகளிர் குலத்துக்கு முதல்வர் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார்.

banner

Related Stories

Related Stories