தமிழ்நாடு

வேலை தேடுவோருக்கு பயனளிக்கும் சூப்பரான திட்டம்... ‘பாலம்’ திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் இணைப்புப் பாலமாக "பாலம்" எனும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

வேலை தேடுவோருக்கு பயனளிக்கும் சூப்பரான திட்டம்... ‘பாலம்’ திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கரூரில் வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் இணைப்புப் பாலமாக "பாலம்" எனும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிதம்பரம் விடுதி கட்டிடத்தில் வேலை தேடும் நபர்களுக்கும், வேலை தரும் தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தி தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் "பாலம்" திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல், கொசுவலை, பேருந்து கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள 4,000 பணியிடங்களை நிரப்பும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலை தேடும் நபர்களான 25 இளைஞர்களுக்கு, 5 நிறுவனங்களின் உதவியுடன் மேடையிலேயே வேலைவாய்ப்பு ஆணையை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

வேலை தேடுவோருக்கு பயனளிக்கும் சூப்பரான திட்டம்... ‘பாலம்’ திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கரூர் மாவட்டத்தில் உள்ள 4.000 காலிப்பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் உதவியுடன் நிரப்பப்படவுள்ளன. கரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன.

வேலை தேடும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் இந்த "பாலம்" திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய நாளாக இந்நாளை கருதுகிறேன். இதேபோல் "அனைவருக்கும் இல்லம்" என்ற திட்டத்தையும் முதல்வர் உதவியுடன் விரைவில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்த இருக்கிறோம். இந்த இரண்டு முக்கிய திட்டங்களும் சிறப்பாக செயல்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories