தமிழ்நாடு

கிராமத்தில் நிகழும் பிரச்னைகளை டெல்லியில் இருந்து எப்படி கையாள முடியும்? - அமைச்சர் PTR சரமாரி தாக்கு!

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கடைசி 10 ஆண்டுகளில் தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

கிராமத்தில் நிகழும் பிரச்னைகளை டெல்லியில் இருந்து எப்படி கையாள முடியும்? - அமைச்சர் PTR சரமாரி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா டுடே நடத்தும் ஸ்டேட் ஆஃப் தி ஸ்டேட் எனும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

அந்தக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது,

”கொரோனா காலகட்டத்தில் சிறு குறு தொழில் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு MSME துறையின் பங்கு முக்கியம்.

புதிய தொழில் முனைவோரை முதலீடு செய்ய ஊக்குவித்து வருகிறோம். தொழில் நுட்பம் மற்றும் சேவை துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி தருவது எங்கள் முக்கிய நோக்கம்.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கடைசி 10 ஆண்டுகளில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை கூட ஓரளவிற்கு பரவாயில்லை.

இந்த ஒரே நாடு என்கிற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியாக ஏற்று கொள்ள முடியாது. இங்கு கிடைப்பது மற்ற மாநிலங்களில் கிடைக்காது. அங்கு கிடைப்பது இங்கு கிடைக்காது.

நியூ யார்க், கலிபோர்னியா போன்ற வளர்ந்த மாநிலங்களில் வளர்ச்சியை அமெரிக்காவில் மற்ற மாநிலங்கள் அடையவில்லை. அதேபோல தான் இந்தியாவிலும். தமிழகம் பல வகைகளில் இந்தியாவில் முன்னேறியுள்ளது. மனிதவள மேம்பாடு, சுகாதார கட்டமைப்பு இங்கு பலமாக உள்ளது.

நீண்ட கால தொலை நோக்கு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் எங்கள் நோக்கம்.

தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை மாநில அரசுடன் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செய்ய வேண்டும். அப்போது தான் அந்த திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்த முடியும்.

பஞ்சாயத்து கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை டெல்லியில் இருந்து எவ்வாறு கையாள முடியும். இது போல எண்ணற்ற திட்டங்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும். ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் படி செயல்பட்டால் தான் வளர்ச்சி அடைய முடியும்.

கடைசி 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார குழப்பங்களை சீர் செய்து வருகிறோம். இங்கு உயர்கல்வி பெறுபவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி பயில்பவர்களை விட அதிகமாக உள்ளனர். இந்தியாவில் தமிழகத்தில் தான் கல்வி கட்டமைப்பு சிறப்பாக விளங்குகிறது. இது தான் திராவிட மாடல்.

இளைஞர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் திகழ்கிறது. இது ஒரு தொலைநோக்கு திட்டம்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories