தமிழ்நாடு

சண்டையை விலக்கி விட்டவருக்கு நேர்ந்த கொடூரம்... அடித்துக் கொன்ற கும்பல் - நடந்தது என்ன?

தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்டவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டையை விலக்கி விட்டவருக்கு நேர்ந்த கொடூரம்... அடித்துக் கொன்ற கும்பல் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெட்ரோல் பங்க்கில் தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (33) லாரி டிரைவரான இவர் நேற்று இரவு பணகுடியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அங்கு 5 பேர் கும்பல் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தகராறு செய்து கொண்டிருந்துள்ளனர். லாரி டிரைவர் கலைச்செல்வன் அவர்களிடம் பேசி தகராறை விலக்கிவிட முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அந்த கும்பல் கலைச்செல்வன் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பணகுடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணீஷ்ராஜா, ஆட்டோ சங்கர், பாலசுப்ரமணியன், சிவா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய மாணிக்கராஜா என்பவரை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories