தமிழ்நாடு

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்... காரணம் கேட்டு மாப்பிள்ளை 'ஷாக்'!

வேறு ஒருவரை காதலிப்பதாகக் கூறி திடீரென திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்... காரணம் கேட்டு மாப்பிள்ளை 'ஷாக்'!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அவ்வை நகரைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இருவீட்டார் முன்னிலையில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

அப்போது, மணமேடையில் அமர்ந்திருந்த மணப்பெண் தாலிக்கடும் நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் மாப்பிள்ளை முதல் உறவினர்கள் வரை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மணப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினர். இதைக்கேட்டு உறவினர்கள் குழப்பமடைந்தனர்.

அப்போது மணப்பெண், தான் வேறு ஒருவரை காதலிப்பதால் இந்த திருமணம் தனக்கு பிடிக்கவில்லை எனவும் இதனால் மயங்கி விழுந்ததுபோல் நடித்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் தினகரன், திருமணத்திற்காகச் செலவு செய்யப்பட்ட பணத்தைப் பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் திருமணத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தைக் கொடுப்பதாகப் பெண் வீட்டார் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories