தமிழ்நாடு

மரக்காணத்தில் மின்கசிவால் தீ விபத்துக்குள்ளான ஓய்வுபெற்ற ஆசிரியர் வீடு; தேடிச்சென்று உதவிய திமுக நிர்வாகி

மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி தீப்பற்றி எரிந்து வீட்டினுள் தீ பரவியதால், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்துசேதம்..

மரக்காணத்தில் மின்கசிவால் தீ விபத்துக்குள்ளான ஓய்வுபெற்ற ஆசிரியர் வீடு; தேடிச்சென்று உதவிய திமுக நிர்வாகி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தேவா கோட்ரஸ் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆதிமூலம் வயது 72.

இவர் குடும்பத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு நேற்று முன் தினம் மதியம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பூட்டியிருந்த அவரது வீட்டிலிருந்து புகை வந்துள்ளது, இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டினுள் எரிந்துக்கொண்டிருந்த குளிர்சாதன பெட்டி, இரும்பு பீரோ மற்றும் மர சாமான்கள் ஆகியவற்றை அணைத்தனர்.

மரக்காணத்தில் மின்கசிவால் தீ விபத்துக்குள்ளான ஓய்வுபெற்ற ஆசிரியர் வீடு; தேடிச்சென்று உதவிய திமுக நிர்வாகி

இந்த விபத்துக்கு காரணம் உயர்மின் அழுத்தத்தினால் மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி (ஃபிரிட்ஜ்) எரிய தொடங்கியதால் அருகில் இருந்த இரும்பு பீரோ மற்றும் மர சாமான்கள் ஆகியவற்றில் தீ பரவி எரிந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஃப்ரிட்ஜ் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பெருட்கள் மற்றும் இரும்பு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50,000 பணம் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தலின்படி மரக்காணம் நகர செயலாளர் ரவிக்குமார் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவருக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories