தமிழ்நாடு

ட்விட்டரில் வந்த கோரிக்கை.. உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க அதிரடி காட்டிய கனிமொழி MP!

உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க கனிமொழி எம்.பி. துரித நடவடிககை எடுத்துள்ளார்.

ட்விட்டரில் வந்த கோரிக்கை.. உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க அதிரடி காட்டிய கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளார். மேலும் உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்ளை மீட்டு வருவதற்கான சிறப்புக்குழுவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள லிவில் நகரில் சிக்கியுள்ள 700க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, உக்ரைனில் லிவில் நகரில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை, இந்திய அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் எல்லைக்கு அழைப்பதால் மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக வானதி சேதுபதி என்பவர் கனிமொழி எம்.பிக்கு ட்விட்டரில் புகார் அனுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, உடனே நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாணவர்களின் விவரங்களைத் தருமாறும் ட்விட்டரிலேயே அவருக்குத் பதிலளித்துள்ளார். பின்னர் வானதி சேதுபதியும் மாணவர்களின் விவரங்களைக் கனிமொழி எம்.பிக்கு அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைனில் லிவில் நகரில் சிக்கியுள்ள 700 இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரிடம் கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories