தமிழ்நாடு

”மூச்சு இருக்கும்வரை இந்த பூச்சி உங்களுடன்தான்” - உணர்வுப்பூர்வமான பிறந்த நாள் பதிவிட்ட பூச்சி முருகன்!

தி.மு.க தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

”மூச்சு இருக்கும்வரை இந்த பூச்சி உங்களுடன்தான்” - உணர்வுப்பூர்வமான பிறந்த நாள் பதிவிட்ட பூச்சி முருகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முதலமைச்சர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

”இன்று தரணி போற்றும் தங்க தளபதிக்கு பிறந்தநாள் மட்டுமல்ல அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்று 300 வது நாளும் கூட. இந்த 300 நாட்களில் ஒரு நாள், ஏன் ஒரு வேளை கூட அவர் அயர்ந்து ஓய்வெடுத்து பார்க்கவில்லை. எனக்கே பகலில் ஓய்வெடுக்க தோன்றினால் அவரது உழைப்பு தான் நினைவுக்கு வந்து அசதியை போக்கி பணிபுரிய வைக்கிறது. தளபதி முதலமைச்சர் ஆனது கடந்த மே என்றுதான் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அவர் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சராகி 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எப்போது எதிர்க்கட்சித் தலைவராகி மக்களை சந்திக்க தொடங்கினாரோ அப்போதே முதல் அமைச்சராகி விட்டார். கொரோனா தொற்றின் போது அவரது செயல் வேகத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்.

இன்று அவரது நல்லாட்சியை நாடே போற்றுகிறது. இந்த சமயத்தில் அவர் சந்தித்த கேலிகளும் கிண்டல்களும் தான் நினைவுக்கு வருகின்றன. அவரது மக்கள் பணியை நேரடியாக முடக்க முயற்சித்து தோல்வி அடைந்தவர்கள்தான் அவற்றை செய்தனர். அத்தனையையும் ஒரு துறவி போல அமைதியான புன்சிரிப்போடு எங்கள் தலைவர் கடந்தார். இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்று ஒரே நேரத்தில் கொரோனா, மோசமான பொருளாதாரம் இரண்டையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம்.

ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ் நாட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து எண்ணம், சொல், செயல் மூன்றிலும் அவர்களது நலனை மட்டுமெ கருத்தில் கொண்டு செயலாற்றுவதால் தான் உலக நாடுகள் கூட பாராட்டுகின்றன. எனக்கு வாழ்நாளை பகிரும் வரம் இருந்தால் அத்தனையையும் தலைவருக்கே கொடுத்து விடுவேன். எங்கள் தமிழ் தேசத்தின் தன்னிகரில்லா தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மூச்சு இருக்கும்வரை இந்த பூச்சி உங்களுடன் தான்..” என உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories