தமிழ்நாடு

அதிமுக கூட்டணி நீடித்திருந்தாலும், திமுக வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது: ஆதாரங்களுடன் பதிலடி

அ.தி.மு.க கூட்டணி அப்படியே நீடித்திருந்தாலும், தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கவே முடியாது எனும் தலைப்பில் நேற்று ‘தி இந்து’ ஆங்கில ஏடு‘ செய்தி வெளியிட்டது.

அதிமுக கூட்டணி நீடித்திருந்தாலும், திமுக வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது: ஆதாரங்களுடன் பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நேற்று ‘தி இந்து’ ஆங்கில ஏடு‘ (அ.தி.மு.க. கூட்டணி அப்படியே நீடித்திருந்தாலும், தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கவே முடியாது) - எனும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றினை வெளியிட்டது.

மூத்த பத்திரிக்கையாளர் டி.இராமகிருஷ்ணன் எழுதியுள்ள அக்கட்டுரையில் அவர், ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் அறுதியிட்ட வெற்றியை வெகுவாக எடுத்துரைத்துள்ளார். தமது கருத்துக்கு தக்க ஆதாரங்களுடன் அவர் வலுச்சேர்த்துள்ளார். அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கே மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம்.

அது வருமாறு: - கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த அ.தி.மு.க. கூட்டணி சிதறாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து இருந்திருந்தாலும் விளைவில் பெரிய வேறுபாடு இருந்திருக்காது. அரசியல் கட்சிகளின் வாக்கு வீதங்களைப் பற்றிய புள்ளி விவர ஆய்வு இதனை வெளிப்படுத்துகிறது. இதற்கான காரணத்தை அதிகம் தேட வேண்டியதில்லை. சட்டமன்றத் தேர்தலில் 45.38% வாக்கு விகிதம் பெற்றிருந்த தி.மு.க. தலைமையிலான கூட்டணி தற்பொழுது தனது வாக்கு விகிதத்தை 4.61% உயர்த்தி, மொத்தத்தில் 49.99% ஆக ஆக்கிக் கொண்டுள்ளது.

ஆனால் அ.தி.மு.க. மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் (பா.ஜ.க., பா.ம.க.) ஒட்டுமொத்த வாக்கு விகிதம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பெற்றிருந்த 39.71% லிருந்து தற்பொழுது 32.07% ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க. விற்கு 8.14% வீழ்ச்சியும், பா.ம.க.வுக்கு 2.29 விழுக்காடு வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அக்கட்டுரையில் மூத்த பத்திரிகையாளர் டி.இராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories