தமிழ்நாடு

”EPS, OPS-ஐயே தெரியும்; அரசு வேலை கன்ஃபார்ம்” - ₹7 லட்சத்தை சுருட்டி தலைமறைவான அதிமுக பிரமுகருக்கு வலை!

ஏற்கெனவே ஒரு பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மோசடி புகார் அளிக்கப்பட்டு போலிஸார் தேடி வருகின்றனர்.

”EPS, OPS-ஐயே தெரியும்; அரசு வேலை கன்ஃபார்ம்” - ₹7 லட்சத்தை சுருட்டி தலைமறைவான அதிமுக பிரமுகருக்கு வலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய அ.தி.மு.க பிரமுகர் மீது திருவள்ளூர் போலிஸிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் லயன் ரமேஷ். இவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது நண்பர் என கூறி கடம்பத்தூர் அடுத்த செஞ்சி பணம்பக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி தருவதாக 4 லட்ச ரூபாய் பணத்தையும், தொழில் வணிகம் செய்யலாம் எனக் கூறி 3 லட்சம் பணத்தையும் பெற்றுக் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அவர் மீது கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

”EPS, OPS-ஐயே தெரியும்; அரசு வேலை கன்ஃபார்ம்” - ₹7 லட்சத்தை சுருட்டி தலைமறைவான அதிமுக பிரமுகருக்கு வலை!

இவர் மீது கடம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள அ.தி.மு.க பிரமுகர் ரமேஷை தேடி வருகின்றனர். ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த மாதம் 23ஆம் தேதி ரமேஷ் மீது ஈஸ்வரன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories