தமிழ்நாடு

VAO வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்தவரை அடித்துக் கொன்ற குடும்பத்தினர்!

வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய ஒருவர் அடித்துக்கொலை. 2பேர் கைது. ஒருவருக்கு வலைவீச்சு

VAO வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்தவரை அடித்துக் கொன்ற குடும்பத்தினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை. இவர் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகளுக்கு வி.ஏ.ஓ வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேலை வாங்கித் தராததால் கொடுத்த பணத்தை கேட்டு நேற்று முன்தினம் கோபால் அவரது மகன் சிவா அவருடைய தாய் விசாலாட்சி மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் ஏழுமலை வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது கொடுத்த பணத்தை கேட்டபோது வாக்குவாதத்தில் தொடங்கி சண்டையாக முடிந்திருக்கிறது.

VAO வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்தவரை அடித்துக் கொன்ற குடும்பத்தினர்!

இதில் ஏழுமலையை தாக்கி வயிற்றில் உதைத்ததால் அவர் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து உள்ளனர். அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் போலிஸார் ஆய்வாளர் பாபு தலைமையில் சிவா , விசாலாட்சி ஆகிய 2 பேரை கைதுசெய்தார்.மேலும் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி கோபால் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories