தமிழ்நாடு

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? - ப.திருமாவேலன் எழுதிய நூலை வெளியிட்டு பேருரையாற்றுகிறார் முதல்வர்

ப.திருமாவேலன் எழுதிய 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' நூலை வெளியிட்டு விழாப்பேருரையாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? - ப.திருமாவேலன் எழுதிய நூலை வெளியிட்டு பேருரையாற்றுகிறார் முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊடகவியலாளர் - கலைஞர் செய்திகள் செய்திப்பிரிவு தலைவர் ப.திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" இரண்டு தொகுதிகள் அடங்கிய நூல் வெளியீட்டு அறிமுக நிகழ்வு 25.2.2022 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

சு.கிருட்டிணன், ரேணுகா திருமாவேலன், நற்றிணை பதிப்பகம் யுகன் ஆகியோர் வரவேற்கின்றனர். இயக்குநர் அமிர்தம், பெரும்புலவர் மு.படிக்கராமு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நூல்களை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழாப் பேருரையாற்றுகிறார். நூல்களைப் பெற்றுக் கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூல் அறிமுகவுரையாற்றுகிறார். நிறைவில் நூலாசிரியர் ப.திருமாவேலன் நன்றி கூறுகிறார்.

நூலின் சிறப்பு குறித்து சிறு குறிப்பு:

அவர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்ற உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது! அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே!

ஆனால், இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை. அவரை விமர்சிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்! அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப் போலிகள் தமிழ்க் களத்தை நாசம் செய்து வருகிறார்கள்.

அந்த அவதூறுகளுக் கானபதிலே இது! அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! சிறியர் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்!

Related Stories

Related Stories