தமிழ்நாடு

தி.மு.க கோட்டையான தூத்துக்குடி மாநகராட்சி.. 50 வார்டுகளில் வெற்றி.. நகராட்சி, பேரூராட்சிகளும் திமுக வசம்!

தூத்துக்குடி மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.

தி.மு.க கோட்டையான தூத்துக்குடி மாநகராட்சி.. 50 வார்டுகளில் வெற்றி.. நகராட்சி, பேரூராட்சிகளும் திமுக வசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்குக் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது. அதேபோல்,119 நகராட்சிகளையும், 320 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் தற்போது வரை 50 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.

மேலும் 11 வார்டுகளில் வெற்றி பெற்று நாசரேத் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கும் திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories