தமிழ்நாடு

அசைக்கமுடியாத வெற்றியை பதிவு செய்து ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க.. முழு விபரம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியை தி.மு.க முதன்முறையாக தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. சேத்தூர், செட்டியார்பட்டி சேர்த்து தி.மு.க வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அசைக்கமுடியாத வெற்றியை பதிவு செய்து ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியது  தி.மு.க.. முழு விபரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 வார்டுகளில் தி.மு.க-வும், 3 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 3 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

ராஜபாளையம் நகர்மன்ற வரலாற்றில் முதன் முறையாக தி.மு.க நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி திமுக கைப்பற்றுகிறது.

மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11-வார்டில் தி.மு.க, 3 வார்டுகளில் சுயேட்சை, ஒரு வார்டில் அ.தி.மு.க உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 வார்டுகளை தி.மு.க-வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க-வும், இரண்டு வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. சேத்தூர் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories