தமிழ்நாடு

இளையராஜாவின் இசையை பயன்படுத்த தடை : காப்பிரைட் விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.

இளையராஜாவின் இசையை பயன்படுத்த தடை : காப்பிரைட் விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் ,அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்...

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி எம்.துரைசாமி நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார்..

தனி நீதிபதி சட்டத்தின் பிரிவு 14ல் "பதிப்புரிமை" என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார் என்றும், இசைப் பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது "எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு" பிரத்தியேக உரிமையாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ,தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து இது குறித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories