தமிழ்நாடு

”நீங்க என்ன குறுக்குசால் ஓட்டினாலும் எடுபடாது; உங்க கனவும் பலிக்காது” - EPSக்கு அமைச்சர் மா.சு., பதிலடி!

நெருக்கடி கால நிலையை சந்தித்தவர்கள் திமுகவினர். எடப்பாடி பழனிசாமி போன்றோரின் மிரட்டலுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

”நீங்க என்ன குறுக்குசால் ஓட்டினாலும் எடுபடாது; உங்க கனவும் பலிக்காது” - EPSக்கு அமைச்சர் மா.சு., பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்டச் செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன் அவர்கள் நகர்மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து

வேளச்சேரி தொகுதிக்குட்ப்பட்ட வட்டங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தவரை சென்னையின் வளர்ச்சி என்பது கண்கூடாக இருந்தது என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவார்கள். சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளிலும் திமுக'வின் வெற்றி மிக பிரகசாமாக உள்ளது.

கடந்த 9 மாத கால ஆட்சியில் செய்த சாதனைகள் மக்களை வெகுவாக சென்றடைந்துள்ளது. அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை எனும் எடப்பாடி பழனிசாமியின் கருத்து முற்றிலும் பொய்யானது. நெருக்கடி கால நிலையை சந்தித்தவர்கள் திமுகவினர் எடப்பாடி பழனிசாமி போன்றோரின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. அவர் கனவு எக்காலத்திலும் பலிக்காது.

எடப்பாடி பழனிசாமி போன்றோர் தமிழகத்தில் எந்த வகையான குறுக்கு சால் ஓட்டினாலும் எடுபடாது. தேர்தல் வாக்குறுதி என்பது 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட கூடியவை. திமுக ஆட்சி பொறுப்பெற்றத்திலிருந்து 70 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிக்க உள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories