தமிழ்நாடு

“ஒன்றிய அரசை வைத்து மிரட்டும் பூச்சாண்டியை எங்களிடம் காட்ட வேண்டாம்”: EPS-க்கு திருச்சி சிவா எச்சரிக்கை!

ஒன்றிய அரசை வைத்துக்கொண்டு மிரட்டும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பூச்சாண்டி காட்டி வருவது நம்மிடம் பலிக்காது என எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஒன்றிய அரசை வைத்து மிரட்டும்  பூச்சாண்டியை எங்களிடம் காட்ட வேண்டாம்”: EPS-க்கு திருச்சி சிவா எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் திருச்சி சிவா பங்கேற்று உள்ளாட்சி நகர்புற தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி. அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள், மக்களின் பிரச்சினைகள் ஆகியவற்றை அறிந்து அதை அரசு நிர்வாகம் மூலம் தீர்த்து வைக்கும் பிரதிநிதிகள் ஆவார்கள்.

எனவே நல்லவர்களை தேர்ந்தெடுப்பது அவசியம். தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டி அடையக்கூடிய வேட்பாளர்கள் மக்களின் பணிகளை விரைந்து செய்து தரக் கூடியவர்கள். அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை மக்கள் எந்த நேரத்திலும் சென்று பார்க்கலாம். அவருடைய அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.

“ஒன்றிய அரசை வைத்து மிரட்டும்  பூச்சாண்டியை எங்களிடம் காட்ட வேண்டாம்”: EPS-க்கு திருச்சி சிவா எச்சரிக்கை!

தேர்ந்தெடுக்கப்பட்டவர் உங்கள் தெரு மற்றும் வீடு தேடி வந்து உங்களுக்காக சேவை ஆற்றுவார்கள். எனவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் தி.மு.க வெற்றி பெற்று இருந்தாலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் நல்லாட்சி தருவேன் என்று கூறியப்படி, சேலம் மாநகராட்சிக்கு முதன் முதலாக வருகை தந்து 510 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சேலத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். கொரானா காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தார். முதல்வரான பிறகும் நோயாளிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறும் வகையில், கொரோனா தடுப்பு உடையணிந்து மருத்துவமனைக்கு உள்ளேயே சென்று நலம் விசாரித்த ஒரே முதல்வர் நமது தமிழக முதல்வர் தான்.

எனவே மக்களின் தேவைகளை அறிந்து உணர்ந்து பணியாற்றிவரும் தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்த, உள்ளாட்சி நகர்ப்புறங்களில் போட்டியிடக்கூடிய தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒன்றிய அரசை வைத்துக்கொண்டு மிரட்டும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பூச்சாண்டி காட்டி வருவது நம்மிடம் பலிக்காது. தமிழக மக்களுக்காக ஒன்றிய அரசிடம் போராடி திட்டங்களை பெற்று வருகிறோம். எனவே மக்களின் நல்ல காவலனாக முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

banner

Related Stories

Related Stories