தமிழ்நாடு

தொண்டையில் சிக்கிய தேங்காய் துண்டு.. மூச்சுத்திணறி 3 வயது குழந்தை பரிதாப பலி!

தொண்டையில் தேங்காய் சிக்கியதால் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டையில் சிக்கிய தேங்காய் துண்டு.. மூச்சுத்திணறி 3 வயது குழந்தை பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த். இவரது மூன்று வயது குழந்தை சஞ்சீஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, சமைப்பதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டு ஒன்றை எடுத்து குழந்தை சாப்பிட்டபோது அது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொண்டையில் தேங்காய் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories