தமிழ்நாடு

திருப்பூரில் இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம்: ஓசூரில் சிக்கிய வடமாநில இளைஞன்; தனிப்படை அதிரடி!

திருப்பூர் பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளி ஓசூர் அருகே கைது : தனிப்படை போலீசார் அதிரடி

திருப்பூரில் இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம்: ஓசூரில் சிக்கிய வடமாநில இளைஞன்; தனிப்படை அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூரில் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து கழிவுநீர் கால்வாயில் போட்டு சென்ற கொலையாளிகளில் ஒருவரை தனிப்படை போலீசார் இன்று ஓசூர் அருகே கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரம் செல்லும் சாலையில் பொல்லிக்கலிபாளையம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சூட்கேசில் அடைக்கப்பட்ட சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. பெண்ணின் சடலம் வீசப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞர்கள் இருவர் சூட்கேஸுடன் பைக்கில் சென்றது கண்டறியப்பட்டது.

திருப்பூரில் இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம்: ஓசூரில் சிக்கிய வடமாநில இளைஞன்; தனிப்படை அதிரடி!

இறந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்பெண்ணின் பெயர் நேகா என்பதும் அபிஜித் என்ற இளைஞரோடு வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் சம்பவம் நடந்த அன்று வீட்டை காலி செய்வதாக உரிமையாளரிடம் கூறிவிட்டு சூட்கேஸுடன் இருவரும் சென்றிருக்கிறார்கள். இதனையடுத்து செல்போன் எண் சிக்னம் மூலம் பின் தொடர்ந்ததில் கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூரில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

திருப்பூரில் இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம்: ஓசூரில் சிக்கிய வடமாநில இளைஞன்; தனிப்படை அதிரடி!

ஓசூர் பகுதியில் திருப்பூர் பெண் வழக்கில் தேடப்படும் கொலையாளி பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சரவண ரவி தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஓசூர் அருகே உள்ள பாத்தகோட்டா கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதில் அங்கு பதுங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கொலை குற்றவாளி கேய்லால் சாவ்ரா (27) என்பவனை கைது செய்தனர். திருப்பூர் பெண் கொலை வழக்கில் கேய்லால் சாவ்ரா ஏ2 குற்றவாளி என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கொலையாளியை போலீசார் திருப்பூருக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர்.

banner

Related Stories

Related Stories