தமிழ்நாடு

ஊழல் புகார் - மக்கள் எதிர்ப்பு: அரியணை ஏறிய ஒரே வாரத்தில் பதவியை ராஜினாமா செய்த பிரதமர் - எங்கு தெரியுமா?

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து பெரு நாட்டின் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் புகார் - மக்கள் எதிர்ப்பு: அரியணை ஏறிய ஒரே வாரத்தில் பதவியை ராஜினாமா செய்த பிரதமர் - எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெரு நாட்டின் பிரதமராக ஹெக்டட் வலர் பின்கோ கடந்த 1ஆம் தேதி பதவியேற்றார். நாட்டு மக்களின் எதிர்ப்பு மற்றும் ஊடங்களில் இவர் மீது எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ஹெக்டட் வலர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஹெக்டட் வலர் பின்கோ குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் புகார் அளித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் புகார்கள் வழக்காக பதியப்பட்டாத நிலையில், அந்த குற்றச்சாட்டை மறுத்துவிட்டார் ஹெக்டட்.

இதனிடையே சில ஊழல் குற்றச்சாட்டுகளும் ஹெக்டட் வலர் மீது எழுந்ததைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் சிலரே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதை ஹெக்டட் வலர் நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதாக அதிபர் பெட்ரோ காஷ்டிலோ கூறியிருந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பிரதமர ஹெக்டட் வலர் பின்கோ கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தத் தகவல் உண்மையா என ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது, பெரு நாட்டின் ஹெக்டட் வலர் பின்கோ வகித்து வந்த தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது ராஜினாமா கடித்தை அந்நாட்டு அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்துள்ளார்.

மேலும் தன் மீது குற்றம் சாட்டியவர்கள் மீது வழக்குத் தொடர இருப்பதாகவும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் பெரு நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories