தமிழ்நாடு

பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு... எங்கெங்கு தெரியுமா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு... எங்கெங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வேட்பு மனு தக்கல் 4ஆம் தேதியோடு நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில், பல இடங்களில் தோல்வியை உணர்ந்துள்ள மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளதால் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 10 வது வார்டில் தி.மு.க நகர செயலாளர் மெடிக்கல் முரளி உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமி மற்றும் சுயச்சை உட்பட 4 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க வேட்பாளர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி வார்டு எண்- 6 ல் மாணிக்கம் என்பவரும், வார்டு எண்- 11 ல் பூங்கொடி ஆகிய இருவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செயதுள்ளனர். இருவருமே தி.மு.க சார்பில் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி 7வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் மனுவை திரும்பப் பெற்றதால் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அன்பு போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி 7வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆனந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் காட்பாடி 7வது வார்டு பகுதியில் தி.மு.க சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் காட்பாடி 8வது வார்டு பகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் சுனில் குமார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க உட்பட 5 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுனில்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டில் தி.மு.க வேட்பாளர் ருக்மணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 18வது வார்டில் தி.மு.க வேட்பாளர் சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி 5-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் உமாமகேஸ்வரி பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் புவனேஸ்வரி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் 9-வது வார்டில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக் போட்டியின்றி தேர்வாகிறார்.

இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 13-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் விஜயா என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் நகராட்சி 7வது வார்டில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பிரவீன் தங்கம் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த அ.தி.மு.க வேட்பாளரின் வேட்பு மனுவில் அதிகளவில் அடித்தல், திருத்தம் செய்திருந்த புகார் எழுந்த நிலையில தேர்தல் அலுவலர் தள்ளுபடி செய்தார். இதனால் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories