தமிழ்நாடு

500 ரூபாய் கடனை திருப்பிக் கேட்டதற்காக காதை கடித்த நபர்... புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரின் காதை கடித்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>Representational image</p></div>
<div class="paragraphs"><p>Representational image</p></div>
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கிராம பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். அதே பகுதியில் வசித்து வருபவர் அப்துல் முகமது. இவருக்கு அப்துல் சலாம் ரூ.500 கடனாக கொடுத்துள்ளார்.

இந்தப் பணத்தைப் பல நாட்களாக திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் அப்துல் முகமது. இதனால் கோபமடைந்த அப்துல் சலாம் 'கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடு' எனக் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அப்துல் முகமது, 'கொடுத்த கடனை திருப்பி கேட்பியா' எனக் கூறி அப்துல் சலாமின் காதைக் கடித்துள்ளார். இதனால் அவரது காதில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்துல் முகமதுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக காதை கடித்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories