தமிழ்நாடு

பழிக்குப் பழி.. அண்ணன் கொலைக்குப் பழிவாங்க வாடகைக்கு வீடு எடுத்த தம்பி: விசாரணையில் பகீர்!

அண்ணன் கொலைக்குப் பழிவாங்கத் திட்டம் தீட்டிய 6 பேரை போலிஸார் கைது செய்தனர்.

பழிக்குப் பழி.. அண்ணன் கொலைக்குப் பழிவாங்க வாடகைக்கு வீடு எடுத்த தம்பி: விசாரணையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், மல்ரோசாபுரம் பகுதியில் ஆறுபேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சுற்றித்திரிவாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலிஸார் தீவிரமாக கண்ணாகணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பத்து நாட்களுக்கு முன்பு தனியார் கம்பெனியில் வேலை செய்வதாகக் கூறி வாடகைக்கு விடு எடுத்த வாலிபர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் வடிவழகன். இவரது தப்பி பாலாஜி. இதையடுத்து ஒரு ஆண்டுக்கு முன்பு வடிவழகனை சிலர் கொலை செய்துள்ளனர். இதற்காக அண்ணன் கொலைக்கு பாலாஜி பழிவாங்கத் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டு வந்துள்ளார்.

பழிக்குப் பழி.. அண்ணன் கொலைக்குப் பழிவாங்க வாடகைக்கு வீடு எடுத்த தம்பி: விசாரணையில் பகீர்!

இதையடுத்து வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். மேலும் கொலை செய்வதற்காக பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடிவந்தது விசாரணையில் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் பாலாஜி அவரது கூட்டாளிகளான ஹரிசங்கர், ஷியாம்குமார், அபிமன்யு, தினேஷ், அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பட்டாக்கத்திகள், மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories