தமிழ்நாடு

2வது திருமணம் செய்து தலைமறைவான கணவர்.. ஆட்கொணர்வு மனு மூலம் கண்டுபிடித்த மனைவி - நடந்தது என்ன?

குன்றத்தூரில் முதல் மனைவி இருக்கும் போதே 2வது திருமணம் செய்து தலைமறைவாக இருந்த கணவர், மனைவியின் ஆட்கொணர்வு மனு மூலமாக கைது செய்யப்பட்டார்.

2வது திருமணம் செய்து தலைமறைவான கணவர்.. ஆட்கொணர்வு மனு மூலம் கண்டுபிடித்த மனைவி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களிலேயே தன்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று ஜெயப்பிரகாஷ் கூறிவந்த நிலையில் தனது மாமனார், மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில் தாய் வீட்டிற்கு மேத்தா வந்துவிட்டார்.

இந்நிலையில் கணவர் ஜெயப்பிரகாஷ் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டு தலைமறைவாக உள்ளதால் அவரை கண்டுபிடித்து தருமாறு குன்றத்தூர் போலிஸில் புகார் அளித்த நிலையில் சிறுகளத்தூரைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்ணுடன் ஜெயப்பிரகாஷ் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் குன்றத்தூர் போலிஸார் தேடி வந்த நிலையில் இருவரையும் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து மேத்தா

திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் மற்றும் உடன் வேலை செய்து வந்த சண்முகப்பிரியா ஆகிய இரண்டு பேரையும் கண்டுபிடித்தனர். இவர்களிடம் போலிஸார் விசாரித்தபோது சண்முகப்பிரியாவை ஜெயப்பிரகாஷ் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பெற்றெடுத்ததும் தெரியவந்தது.

மேலும் முதல் மனைவி இருக்கும்போதே அவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் ஜெயப்பிரகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்னை வரதட்சணை கொடுமை செய்ததாகவும் மேத்தா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் ஜெயப்பிரகாஷ் அவரது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் என 10 பேர் மீது குன்றத்தூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் மனைவி இருக்கும்போதே அவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த ஜெயப்பிரகாஷை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories