தமிழ்நாடு

“வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்புவார்” : திலீப் மண்டல் கட்டுரை !

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள எதிர்க்கட்சிக்கான வெற்றிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்புவார் என்று பத்திரிகையாளர் திலீப் மண்டல் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்புவார்” : திலீப் மண்டல் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“இந்தியா டுடே’’ இந்தி பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியரும் ஊடகம் மற்றும் சமூகவியலில் நூல்களை எழுதியிருப்பவருமான பத்திரிகையாளர் திலீப் மண்டல் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கட்டுரை நீரா மஜூம்தாரால் தணிக்கை செய்யப்பட்டு, “கோவில்களுக்குள் “நீட்’’, ஸ்டாலினின் தமிழ்நாடு ஒரு புதிய சமூகநீதி வாய்பாட்டை உருவாக்கியுள்ளது. மண்டல் பிளஸ் மார்க்கெட் என்ற தலைப்பிலும், வடநாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்க்கட்சிக்கான வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் உணர்ந்திருக்கக்கூடும் அதன் அரசியல் இந்து - முஸ்லிம் இரட்டை நட்சத்திர மோதலாகக் குறைக்கப்பட்டுவிட்டது. தி.மு.க. தலைவர் சமூக நீதி தடியைக் கையில் எடுத்துள்ளார்’’ என்ற துணைத் தலைப்பிலும், வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிக்கு மறுவடிவம்!

வட இந்திய மண்டல் மாநிலங்கள் “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் புதிய அரசியலாலும் இந்துத்வா மாநிலங்களாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் நாட்டின் சமூக நீதித் தடி மறுபடியும் தமிழ்நாட்டால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளின் சமூக நீதிப்போராளிகளுக்கு தற்போது வயதாகி விட்டதால் புதிய யுகத்தில் தங்களை மறு விளக்கம் செய்துகொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு, அதிகரிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் “நீட்’’ மற்றும் இட ஒதுக்கீடு வாதத்தை அரசியலிலும் நீதிமன்றங்களிலும் மறுவடிவம் செய்துள்ளது. 21வது நூற்றாண்டின் திருப்பம் என்னவென்றால் அவர் ஒரு புதிய வாய்பாட்டை முயற்சித்திருக்கிறார் - மண்டல் பிளஸ் மார்க்கெட் முந்தைய யுகத் தலைவர்கள் மண்டல் பிளஸ் சோசலிசம் என்று போதித் தார்கள்.

இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இது அரசியலுக்கும் சமூகநீதி அரசியல்வாதிகளுக்கும் யுத்தம் நடக்கும் கடுமையான நேரம். அரசியல் விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஜஃப்ரலாட், சரியாகக் குறிப்பிட்டதுபோல “மவுனப் புரட்சி’’ தற்போது முடிவடைந்துவிட்டது. இது மாபெரும் பின்புறப் பயணத்துக்கான நேரம் ஏனெனில், “மவுனப் புரட்சி ஒரு எதிர்ப் புரட்சியைச் கொண்டு வந்தது அது உயர்குடிமக்களின் பழிவாங்கல் அதன் முன்னணிப் படையாக பா.ஜ.க. உள்ளது. தேசிய கட்சியில் குறிப்பாக 2014க்கு பிறகு பாரம்பரிய சமூகநீதி அரசியல் தனது பிரகாசத்தை இழந்துவிட்டது.

கொள்கை ரீதியான பதிலடி தர முயற்சி!

ஆனால் எல்லாம் இழக்கப்படவில்லை. இன்னமும் அங்கே ஒரு கோட்டை உள்ளது. அது இந்துத்வா விளக்கத்திற்கு கொள்கை ரீதியான பதிலடி கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் வித்தியாசமான வகையான கோயில் அரசியலையும் செய்து வருகிறது. இந்தச் சவால் திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாலும் அளிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற வெற்றிகளை மாறாமல் வைத்துக் கொண்டு தி.மு.க.வின் அரசியல் விளக்கங்கள் சமூக நீதி, நலத்திட்டங்கள், பகுத்தறிவுடன் வளர்ச்சி பற்றிய அரசியல் விளக்கமாக உள்ளது.

ஒரு முக்கியமான வளர்ச்சியாக குடியரசு நாளில் தான் விரைவில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை தொடங்கப் போவதாகவும் அதன் மூலம் கூட்டாட்சி மற்றும் சமூக நீதியின் கொள்கைகளை தேசிய அளவில் சாதிப்பதற்கு உழைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். அதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் தலைவர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தனது தேசிய ஆசையை முதன் முறையாக மு.க.ஸ்டாலின் காண்பித்துள்ளார். இது தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல. ஏற்கனவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வலுவான அடித் தடங்களைப் பதித்துள்ளார். மு.க.ஸ்டாலின் ஒரு வேளை அங்கே எதிர்கட்சிக்கான இடத்தில் கொள்கை ரீதியான வெற்றிடம் உள்ளது என்பதை உணர்ந்திருக்கலாம். எதிர்க்கட்சிகள் இந்துத்வாச் சூழலில் சிக்க வைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. வெற்றிகரமாக, தேசிய அரசியலை இந்து-முஸ்லிம், மதச்சார்பின்மை - வகுப்புவாதம் என்ற இரட்டை நிலை மோதலுக்குச் சுருக்கிவிட்டது.

இந்தச் சூழலுக்குள் எதிர்க் கட்சிகளும் இழுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இன்னமும் காட்டுக்குள் தன்மை மீட்பவரைத் தேடிச் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனோபாவம் பா.ஜ.க.வுக்கு கருமையாக ஏற்படுவதற்கும் காத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் காங்கிரஸ், பெருமளவில் ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே களம் அமைத்துக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் அதே மதச் சார்பின்மை வகுப்புவாத அட்டையை, மாநில வங்காளப் பெருமையுடன் பயன்படுத்திவருகிறார்.

“வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்புவார்” : திலீப் மண்டல் கட்டுரை !

வடக்கே வெற்றிடம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக நீதி அரசியல், அல்லது அடையாளம் காணும் அரசியல் அல்லது சாதி அரசியல் என்றும் பத்திரிக்கையாளர்களின் பார்வையில் காணப்பட்ட வட இந்தியாவின் வலுவான சக்தியாக பயன்படுத்தப்பட்ட அரசியல் குறிப்பாக பீகாரிலும் உ.பி.யிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த மாநிலங்கள் ஒரு காலத்தில் முலாயம் சிங் யாதவ், கன்ஷிராம், மாயாவதி மற்றும் லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களால் ஆளப்பட்டது. கன்ஷிராம் ஒரு போதும் எந்த அரசுப் பதவியும் வகிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் என்ற முறையில் உ.பி.யிலும், டெல்லியிலும் முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்.

இது மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட காலமும் ஆகும். அதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தத் தலைவர்கள் பல்வேறு கூட்டணி ஆட்சிகளில் - வி.பி.சிங், சரண்சிங், எச்.டி.தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆட்சிகளில் முக்கியப் பங்கு வகித்தனர்.

முலாயம் சிங், லாலு பிரசாத் மற்றும் கன்ஷிராம் ஆகியோர் பிரதமராக ஆசைப்பட்டனர். ஆனால் அது வெறும் பகல் கனவாக இருக்கவில்லை. முலாயம் சிங்கும், லாலு பிரசாத்தும், மன்மோகன் சிங் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் முக்கியப் பங்கு வகித்தனர்.

அந்த யுகம் சென்றுவிட்டது. லாலு பிரசாத் நிதிஷ்குமாரின் சமூகப் பொறியியலால் வெளியேற்றப்பட்டுவிட்டார். 2005 முதல் நிதிஷ்குமார் பீகாரின் முதலமைச்சராக இருந்து வருகிறார். (2014-ல் சிறிய இடைவெளி இருந்த போதிலும்) 18 ஆண்டுகள் என்பது அரசியலில் உண்மையிலேயே நீண்ட காலம் தான் தேஜேஷ் வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், (அர்.ஜே.பி.) பீகார் சட்டப் பேரவையில், அதிக அளவிலான எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ளது.

ஆனால், அவர் இன்னமும் ஓர் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருக்கிறார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சி 2014, 2017 மற்றும் 2019 தேர்தல்களில் உ.பி.யில் மோசமாக தேல்வியடைந்தது பி.எஸ்.பி.யின் செயல்பாடு அதைவிட மோசம் 2007ஆம் ஆண்டின் உ.பி.யில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு அது எந்த தேர்தலிலும் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து சமூக நீதி சக்திகளையும் ஒன்று திரட்ட வேண்டும் என்று கூறிய போது, அவர் அந்த கொள்கை ரீதியான வெற்றிடத்தை உணர்ந்திருக்கிறார் அந்த கொள்கை வெற்றிடத்தை நிரப்ப அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

“வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்புவார்” : திலீப் மண்டல் கட்டுரை !

மாநிலத்தின் அரசியல் ஒற்றுமை ஏற்படுத்தியவர்!

மு.க.ஸ்டாலின் அவர்களின் வடக்கு ஆசை நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கிடைத்த வெற்றி ஊக்கச் சக்தியாக உள்ளது. மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு வழங்கிய இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீடு இடங்கள் என்று கூறப்படுகிறது. தி.மு.கழகம் தனது தேர்தல் அறிக்கையில் “நீட்” (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்வை ரத்து செய்வதற்கு பாடுபடும். அதன் மூலம் மாநிலங்கள் தங்கள் சொந்தத் தேர்வை நடத்திக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தது. அது நடைபெறவில்லை. ஆனால் தி.மு.கழகம் இதர பிற்படுத்தப்பட் டேருக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை பெரிய அளவில் எழுப்பியது.

பிரதமருக்கும் - தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கும், நாட்டின் புகழ் பெற்ற பிரபலத் தலைவர்களுக்கும் அது குறித்து கடிதங்கள் எழுதினார். அது தொடர்பாக மாநிலத்தில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தினார். தி.மு.கழகம் நீதி மன்றங்களில் நீண்ட கால யுத்தம் நடத்தியது. அதற்கு தமது கட்சியின் சொந்த வழக்கறிஞரான நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சனையே, அந்த வழக்கில் வாதாடுவதற்காக நியமித்தார். அந்தக்கட்சி இறுதியாக சட்ட யுத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. பின்னர் அது உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

தி.மு.கழகம் இந்தப் பிரச்சினையில் ஏறக் குறைய தனியாகவே யுத்தம் நடத்தியது. அதனால் நாட்டின் சமூக நீதிக்கான ஒரே அல்லது முன்னணி போராளி என்ற அதன் உரிமைக் கோரிக்கை உயர்ந்துள்ளது. அதே நேரம் தி.மு.கழகம் அதன் சாதி மறுப்பு செயல்பாடுகளில் முழு வேகத்துடன் ஈடுபட்டது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு நரிக்குறவப் (ஒரு நாடோடி பழங்குடி இனப்) பெண் மாமல்லபுரத்தில் ஒரு பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்.

முதல் அமைச்சர் அலுவலகம் இந்தப் பிரச்சினையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றது. விரைவில் அந்தக் கோவிலில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அந்தப்பெண்மணி அமைச்சருக்கும் அறநிலையத்துறை ஆணையருக்கும் இடையில் அமர்ந்து முழு உணவையும் உண்டார்.

இது உண்மையிலேயே ஒரு வலுவான அறிக்கையாகும். வடக்கில் பா.ஜ.க. கோவில் இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, தி.மு.கழகம் தமிழ்நாட்டில் வேறுவிதமான கோவில் இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தது. தி.மு.கழகத்தின் கொள்கைக் குருவான (ஆசானான) தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. சூத்திரர்களும் பெண்களும் தமிழ்நாட்டுக்குக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதே அந்தக்கனவாகும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதனை அமல்படுத்துவதற்கு தன்னால் இயன்ற வரை மிகச் சிறப்பாக முயற்சி செய்தார். ஆனால் நீதிமன்ற வழக்குகளும் இதர குழப்பங்களும் காரணமாக அவர் தோல்வி அடைந்தார். இறுதியாக மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கச் செய்து அனைத்து சாதிகள் மற்றும் பாலினங்களிலிருந்தும் அர்ச்சகர்களை நியமிக்கத் தொடங்கினார்.

“வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்புவார்” : திலீப் மண்டல் கட்டுரை !

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது !

இதற்கிடையில் தி.மு.கழகம் அதன் தமிழை மையமாகக் கொண்ட அரசியலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தது அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி (மீடியம்) கல்வி பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய அதன் கொள்கை ஏழைத் தமிழர்களை நோக்கமாகக் கொண்டதாகும்.

அதேபோன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் “வீடுதேடி கல்வி’ என்றத் திட்டத்தை பொதுப் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தினார். அதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் கொரோனோ தொற்று காலத்தில் கல்வி பெற முடிந்தது. ஏழை மாணவர்களுக்கு இணைய வழி (ஆன்லைன்) வகுப்புகளில் கலந்து கொள்வது மிகவும் கடினமாகும். எனவே, அரசு தன்னர்வத் தொண்டர்களை வாடகைக்கு அமர்த்தி சமுதாயங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கான இடத்துக்கு சென்று, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.

கடைகளிலும், அமைப்புகளிலும் பணியாற்றும் பணியாளர்கள் உட்காருவதற்கான உரிமைச் சட்டம் ஒன்றையும் தமிழ்நாடு இயற்றி உள்ளது. அதன்மூலம் அவர்கள் உட்காருவதற்கான உரிமையைக் கோர முடியும். கேரளாதான் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் ஆகும்.

தமிழ்நாடு ஏற்கனவே சுகாதாரத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலமாகும். மு.க.ஸ்டாலின் அவர்கள் முந்தைய அரசின் பல திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் அதனைத் தொடர்ந்து செயல்படச் செய்து வருகிறார். சமூக நீதி அரசியல் மாநில மக்களுக்காக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று உரிமை கோரும் நிலையில் அவர் இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் அமைக்க திட்டமிட்டிருக்கும் சமூக நீதி முன்னணி கருத்து கூட்டாட்சி முறையின் அடிப்படையில் செயல்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் இதர கட்சிகளுக்கு அவர்களும் சம அளவிலான பங்குதாரர்களாகச் செயல்படுவதற்கு இணைந்து வரலாம் என்ற சமிக்ஞையைக் காட்டியுள்ளார். ஆனால் இந்தப்பிரச்சினையில் அவருடைய நற்சாட்சிப் பத்திரங்கள் மற்ற எவரையும் விட அவருக்கே மிகச் சிறப்பாக இருப்பதால், அத்தகைய எந்த ஒரு அமைப்பின் தலைமையும் தானாகவே தமக்கு வந்து சேரும் என்று அவர் நினைக்கலாம்” இவ்வாறு திலீப் மண்டல் 28.01.2022 அன்று எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories