தமிழ்நாடு

”நான் ஒரு IAS; என்கிட்டயே தகராறு பண்றாங்க” - புகாரளிக்க வந்த போலி அதிகாரி கைது - மதுரவாயல் போலிஸ் அதிரடி!

ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் கைது.

”நான் ஒரு IAS; என்கிட்டயே தகராறு பண்றாங்க” - புகாரளிக்க வந்த போலி அதிகாரி கைது - மதுரவாயல் போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி கடந்த ஜனவரி 1ஆம் தேதி மதுரவாயல் கிருஷ்ணா நகர் நும்பல் அருகே காரில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் தனது கார் மீது மோதி தன்னிடம் தகராறு செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்க வந்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திடீரென போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட சுபாஷிடம் தனது அடையாள அட்டையை காண்பிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சுபாஷ் தனது அடையாள அட்டையை போலீசிடம் கொடுத்தபோது அதை காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட பொழுது மேலும் சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் தீவிர சோதனையின் போது சுபாஷ் அளித்த அடையாள அட்டை போலியானது எனவும் சுபாஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரியே இல்லை எனவும் தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி வலம் வந்த விருகம்பாக்கம் காமராஜ் நகர், எஸ்.எஸ்.வில்லா ரெட்டி தெரு பகுதியை சேர்ந்த சுபாஷ் (27) என்பவரை கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

banner

Related Stories

Related Stories