தமிழ்நாடு

அறுவை சிகிச்சையின் போது "முத்தே என் முத்தாரமே" பாடல் பாடிய பெண்: நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள்!

அறுவை சிகிச்சையின் போது பெண் பாடல் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறுவை சிகிச்சையின் போது "முத்தே என் முத்தாரமே" பாடல் பாடிய பெண்: நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. பாடலாசிரியரான இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்தபோது, புற்றுநோய் கட்டி நுரையீரல் உட்படப் பல பகுதிகளில் பரவி இருந்தது தெரிந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது அவருக்கு மயக்கமருந்து செலுத்தப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது "முத்தே என் முத்தாரமே" பாடல் பாடிய பெண்: நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள்!

அப்போது, சீதாலட்சுமி "முத்தே என் முத்தாரமே" என்ற பாடலை முணுமுணுக்கத் துவங்கினார். இதேபோல் அவர் பல பாடல்களைப் பாடினார். இதை பார்த்து மருத்துவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முதல் முறையாக அறுவை சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் பாட்டுப்பாடிய சம்பவம் நடந்துள்ளது என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சையின் போது சீதாலட்சுமி பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories